கர்நாடகாவில் 17 எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்கம் யெ்யப்பட்டதால் காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிச.,5 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. பா.ஜ.,விடம் ஏற்கனவே 106 எம்எல்ஏ.,க்கள் உள்ள நிலையில், 6 ல் வெற்றி பெற்றால் பெரும்பான்மையை பெற முடியும் என்ற நிலையில் பா.ஜ., இந்த தேர்தலை எதிர்கொண்டது. இதில் 15 ல் 12 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதனால் கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு, ஆட்சியை தக்க வைத்தது.
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் காங்., : மோடி விளாசல்